இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷட்பூர் நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நேர்ந்த விபத்தொன்றில் 24 வயது ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த எரிபொருள் பம்பி காரிலிருந்து கழன்று ஊழியரின் தலையில் பலமாகத் தாக்க…

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷட்பூர் நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நேர்ந்த விபத்தொன்றில் 24 வயது ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த எரிபொருள் பம்பி காரிலிருந்து கழன்று ஊழியரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளது. இச்சம்பவத்தின் போது எரிவாயுக் கசிவும் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் இருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடும் காட்சிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன.

பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த ஆடவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எரிபொருள் குழாய் எதனால் கழன்றது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.