ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், இப்பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கும் அமெரிக்காவுக்கு, இந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் அவற்றின் சரக்கு மதிப்ப…
ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், இப்பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கும் அமெரிக்காவுக்கு, இந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் அவற்றின் சரக்கு மதிப்பில் 20 சதவீதத்தை பாதுகாப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரானுடன் அண்மையில் எட்டப்பட்டிருந்த தற்காலிக அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து திறந்தே இருக்கும். அமெரிக்கா இனி ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும். இந்த ஆபத்தான பகுதியில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான செலவினங்களை ஈடுகட்ட, நியாயமான முறையில் 20 சதவீத கட்டணம் உடனடியாக வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் கப்பல்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் கப்பல்களை மட்டுமே இலக்காகக் கொண்டு ஈரான் முற்றுகை மீண்டும் அமல்படுத்தப்படுவதாகவும், மற்ற நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். (a)

