கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தலைவர்கள், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பயணித்தால் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெர…

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தலைவர்கள், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பயணித்தால் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் உள்ள நாங்கள், முஸ்லிம் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கவில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தால் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் மாகாண சபைத் தேர்தலுக்கான அடித்தளமாக இருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், முஸ்லிம் தலைவர்கள் சிலர் எங்களுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள சிலர், முஸ்லிம்களுடன் சமரசமாக இருந்து அவர்களுடைய ஆட்சியை நிலைநாட்டலாம் என்ற எண்ணத்தில் இருப்பது போன்று தெரிகிறது” என்றார்.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு அரசியல் சூட்சுமங்களை மக்களின் பார்வைக்கு கொண்டு வருகிறது “ஊடறுப்பு” நிகழ்ச்சி,