அணிகளுக்கான சுற்றில், நட்சத்திர வீரர் ஆர்லிங் ஹோலாண்டின் 86ஆவது நிமிட அதிரடி கோலின் உதவியுடன் ஐவரி கோஸ்ட் அணியை 2-1 என வீழ்த்தி நோர்வே வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ண விலகல் முறையிலான சுற்று வரலாற்றில் நோர்வே பதிவு செய்யும் முதலாவது வெற்றி இதுவாகும். போட்டியின் 39ஆவது ந…

அணிகளுக்கான சுற்றில், நட்சத்திர வீரர் ஆர்லிங் ஹோலாண்டின் 86ஆவது நிமிட அதிரடி கோலின் உதவியுடன் ஐவரி கோஸ்ட் அணியை 2-1 என வீழ்த்தி நோர்வே வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ண விலகல் முறையிலான சுற்று வரலாற்றில் நோர்வே பதிவு செய்யும் முதலாவது வெற்றி இதுவாகும்.

போட்டியின் 39ஆவது நிமிடத்தில் நோர்வேயின் மார்டின் ஒடேகார்ட் கொடுத்த பந்தைப் பயன்படுத்தி, அன்டோனியோ நுசா  ஒரு பிரமாதமான கோல் அடித்து நோர்வேயை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமாக ஆடிய ஐவரி கோஸ்ட் அணிக்கு, 74ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களம் அமத் டயாலோ, நிக்கொலஸ் பெப்பேயுடன் இணைந்து ஒரு இமாலய கோல் அடித்து 1-1 என ஆட்டத்தைச் சமன் செய்தார்.

போட்டி சமநிலையை நோக்கி நகர்ந்தபோது, 86ஆவது நிமிடத்தில் ஒஸ்கார் பொப் மற்றும் பற்றிக் பெர்க் ஆகியோரின் அபாரமான பந்துப் பரிமாற்றத்தை கோலாக்கி ஹோலாண்ட் நோர்வேயின் வெற்றியை உறுதி செய்தார். நடப்புத் தொடரில் ஹோலாண்ட் அடிக்கும் 5ஆவது கோல் இதுவாகும்.

இந்த த்ரில் வெற்றியின் மூலம் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியுள்ள நோர்வே, அடுத்த சுற்றில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை எதிர்கொள்ளவுள்ளது.