ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியதையடுத்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும்…
ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியதையடுத்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக கோட்டே மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

