அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்து வரும் போர், உலகளாவிய கடல்வழி வர்த்தகம் மற்றும் மசகு எண்ணெய் விநியோகத்தை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தின் டமியேட்டா துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான எரிவாயுக் கப்பல் மீது அடையாளம் தெரியாத ட்ரோ…
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்து வரும் போர், உலகளாவிய கடல்வழி வர்த்தகம் மற்றும் மசகு எண்ணெய் விநியோகத்தை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தின் டமியேட்டா துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான எரிவாயுக் கப்பல் மீது அடையாளம் தெரியாத ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
சுயஸ் கால்வாய் பகுதிக்கு மிக அருகில் நடந்த இத்தாக்குதல், சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு எஞ்சியிருந்த பாதுகாப்பான வழியான சுயஸ் கால்வாய் மூலமான கப்பல் போக்குவரத்திற்கும் புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்போது ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஈரான் நடத்திய தாக்குதல்அனுமதி பெறாமல் இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஓமன் நாடு ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தைச் சீரமைக்க முன்வைத்த திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ள போதிலும், பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானின் இராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியது.
இப்போரில் முதன்முறையாகச் சவூதி அரேபியா, அமெரிக்காவுடன் இணைந்து ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுப் படைகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீதும், குவைத்தில் உள்ள சீனாவுக்குச் சொந்தமான கட்டிடம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் சுயஸ் கால்வாய் அருகேயான தாக்குதல்கள் காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரே நாளில் 8% வரை உயர்ந்து, ஒரு பீப்பாய் 90 டொலரை நெருங்கியுள்ளது.












