அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறந்துதான் உள்ளது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். NBC தொலைக்காட்சியின் 'மீட் த பிரஸ்' நிகழ்ச்சியுடனான நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப்…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறந்துதான் உள்ளது என்று ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

NBC தொலைக்காட்சியின் 'மீட் த பிரஸ்' நிகழ்ச்சியுடனான நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.ஹோர்முஸ் நீரிணை சமீபத்திய மோதல் சூழலில், "மறுஅறிவிப்பு வரும் வரை" ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது. இருப்பினும், கப்பல்கள் அதன் வழியே தொடர்ந்து பயணித்து வருவதாக அமெரிக்க இராணுவம் முன்னதாக வலியுறுத்திக் கூறியிருந்தது.

"ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை. கப்பல் போக்குவரத்து தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது," என்று மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் கண்காணிக்கும் சென்ட்காம் (CENTCOM) அமைப்பு எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளது.