இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச.) நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் பயண சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், 600 புதிய ‘Deluxe’ ரக குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்க முதலீட்டு திட்டத்தின் கீழ், 49 மு…

இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச.) நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் பயண சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், 600 புதிய ‘Deluxe’ ரக குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான அரசாங்க முதலீட்டு திட்டத்தின் கீழ், 49 முதல் 54 ஆசனங்கள் கொண்ட 600 ‘Standard’ ரக பேருந்துகளை வாங்குவதற்காக 14,400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால், 2025–2026 வீதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு தரநிலைகளை கருத்தில் கொண்டு, நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கு ‘Deluxe’ ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகள் பொருத்தமானவை என அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்குள், ‘Standard’ ரக பேருந்துகளுக்கு பதிலாக அதிக வசதிகளும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் கொண்ட 600 ‘Deluxe’ ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது.