ஈரானுடன் வணிகத் தொடர்புகளைப் பேணி வரும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் இரண்டாம் நிலைத் தடைகளின் வரம்பை விரிவுபடுத்த அமெரிக்க நிதித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. ஈரானியத் தலைநகர் தஹ்ரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடி…
ஈரானுடன் வணிகத் தொடர்புகளைப் பேணி வரும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் இரண்டாம் நிலைத் தடைகளின் வரம்பை விரிவுபடுத்த அமெரிக்க நிதித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
ஈரானியத் தலைநகர் தஹ்ரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியிலான வளைகுடா நாடுகளின் எரிபொருள் ஏற்றுமதியைப் பாதித்துள்ள 6 மாத கால போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, ஈரானுடனான வர்த்தகத் தொடர்புகளை உடனடியாகத் துண்டிக்குமாறு ஏனைய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.அழுத்தமான நடவடிக்கை அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இந்தத் தடைகள் குறித்த மேலதிக விபரங்களை செய்தியாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸ்கொட் பெசென்ட் ஆகியோரால் 'பொருளாதார D-Day' என வர்ணிக்கப்படும் இந்த அழுத்தமான நடவடிக்கை குறித்தும் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளது.
இதன்படி, உலகின் ஏனைய நாடுகள் அமெரிக்காவின் பக்கமா அல்லது ஈரானின் பக்கமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்றும், மீறும் பட்சத்தில் டொலர் அடிப்படையிலான சர்வதேச நிதி அமைப்பில் இருந்து குறிப்பிட்ட நாடுகளின் பிரதான நிறுவனங்கள் துண்டிக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்கா வெளிப்படையாக எச்சரிக்கவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening












