இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். இளம் தலைமுறையினர் இயற்கை உணவுகளை விட செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வதே இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்…
இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறையினர் இயற்கை உணவுகளை விட செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வதே இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மன அழுத்தம் மற்றும் பதற்றம் உள்ளிட்ட உளவியல் காரணிகளுக்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார். மூளைக்கும் குடலுக்கும் இடையிலான இந்த தொடர்பு ‘குடல்–மூளை அச்சு’ (Gut-Brain Axis) என அழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கும் போது அதன் தாக்கம் குடலிலும் வெளிப்படக்கூடும் என அவர் கூறியுள்ளார். இதனுடன் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் இணையும் போது, எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம் என அவர் விளக்கியுள்ளார்.
காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற இயற்கை உணவுகளைத் தவிர்த்து, எளிதில் கிடைக்கக்கூடிய செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை இளைஞர்கள் அதிகம் நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் விளைவாக இளம் தலைமுறையினரிடையே IBS உள்ளிட்ட குடல் சார்ந்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.




-558896_850x460.jpg)







