மட்டக்களப்பில் 26 வயதுடைய இளம் தாய் ஒருவர், டெங்கு காய்ச்சலினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடத்தில் பதிவான முதலாவது டெங்கு மரணம் இதுவாகும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். வாழைச்சேனை, பேத்தாழை…
மட்டக்களப்பில் 26 வயதுடைய இளம் தாய் ஒருவர், டெங்கு காய்ச்சலினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடத்தில் பதிவான முதலாவது டெங்கு மரணம் இதுவாகும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை, பேத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 26 வயதுடைய இளம் தாய், கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் 7ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவருக்கு டெங்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 18ஆம் திகதி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, வைத்திய நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி அவர் பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்தார்.
எனினும், பிரசவத்தின் பின்னர் அவருக்குத் தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் வராதமையினால் அவரது இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் என்பன செயலிழக்கத் தொடங்கின.
இந்த நிலையில், அவர் கடந்த 25ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை பேத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த பட்டதாரியான மோகன் ஜெயப்பிரியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R

