வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இனிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. போட்டியின் நான்காம் நாளான ​​நேற்று ஞாயிற்றுக்கிழமை த…

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இனிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

போட்டியின் நான்காம் நாளான ​​நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது இரண்டாம் இனிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இனிங்ஸ் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி அதன் முதலாம் இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 120 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன்பின்னர் தமது முதலாம் இனிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 626 ஓட்டங்களைப் பெற்று வலுவானதொரு நிலையை அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அமிர் ஜங்கூ 233 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேர்ஸ் 194 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

இதன்மூலம் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.