எல் நினோ நிலைமையுடன் நிலவும் வெப்பத்தின் மத்தியில் மதுபானம் மற்றும் இனிப்பு பானங்களை அருந்துவது மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தி மரணத்தை உருவாக்கலாம் எனவும் சுகாதார அமைச்சின் தொழில்சார் சுகாதாரப் பிரிவு எச்சரித்து…
எல் நினோ நிலைமையுடன் நிலவும் வெப்பத்தின் மத்தியில் மதுபானம் மற்றும் இனிப்பு பானங்களை அருந்துவது மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தி மரணத்தை உருவாக்கலாம் எனவும் சுகாதார அமைச்சின் தொழில்சார் சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.
இந்நாட்களில் மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை காணப்படுகின்றது. நீரிழப்பு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்கள்மதுபானம் அருந்துவதனால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்கள் தோன்றக்கூடும் என அந்தப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் இனோகா சுரவீர தெரிவித்தார். வெப்பமான வானிலை எதிர்வரும் சில நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும். உடல் நீரிழப்புக்கு உள்ளாகாமல் பாதுகாப்பதற்கு சுத்தமான நீர், இளநீர், தர்பூசணி போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது.எல் நினோ நிலைமையுடன் வளிமண்டலத்தின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும். இதனால், சிறுவர்கள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் வெயிலில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். மரணங்கள் கூட நிகழக்கூடும்மேலும் பாதுகாப்பான முறைகளைப் பின்பற்ற வேண்டும். விசேடமாக தொற்றா நோய்களைக் கொண்ட சிறுநீரக நோயாளர்கள், இதய நோயாளர்கள், பக்கவாத நோயாளர்கள் மற்றும் நீரிழிவு நோயாளர்கள் தமது மருந்து மாத்திரைகளை முறையாக பெற்றுக்கொண்டு சுகாதாரப் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் முக்கியமானது. வெப்பத் தாக்கத்திற்கு உள்ளாவதால் மரணங்கள் கூட நிகழக்கூடும். இதனால் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறும் சமூக வைத்திய நிபுணர் இனோகா சுரவீர மேலும் கேட்டுக்கொண்டார்.












