உலக வங்கி புதன்கிழமை (1) வெளியிட்டுள்ள சமீபத்திய பொருளாதார வகைப்பாட்டின் அடிப்படையில், இலங்கை மீண்டும் உயர்-மத்திய வருமானம் பெறும் நாடு (Upper-Middle Income Economy) என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கையின் பொருள…

உலக வங்கி புதன்கிழமை (1) வெளியிட்டுள்ள சமீபத்திய பொருளாதார வகைப்பாட்டின் அடிப்படையில், இலங்கை மீண்டும் உயர்-மத்திய வருமானம் பெறும் நாடு (Upper-Middle Income Economy) என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்ததுடன், நாட்டின் வருமானத் தரமும் தாழ்ந்திருந்தது.

எனினும், அந்த நெருக்கடியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் பலனாக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மீண்டும் உயர்மத்திய வருமான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேவேளை, 2025ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், உற்பத்தித் துறை மற்றும் கைத்தொழில் துறைகளில் ஏற்பட்ட மீட்சியே நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாகவும் உலக வங்கி தனது மதிப்பீட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.