இலங்கை பெண் சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் விருது வழங்கும் விழா! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join ஜூலை 19ஆம் திகதி, அலரி மாளிகையில், இலங்கை பெண் சாரணர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருத…

இலங்கை பெண் சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் விருது வழங்கும் விழா!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

ஜூலை 19ஆம் திகதி, அலரி மாளிகையில், இலங்கை பெண் சாரணர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழாவில்” பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டார்.

நிகழ்வில் உரையாற்றும்போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய”ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும், சிறுமியர்களுக்கும் முன்னோக்கி வருவதற்கும், முன்னேற்றமடைவதற்கும் சம வாய்ப்புகள் கிடைக்கப்பெற வேண்டும். இன்று இருக்கும் இந்த நாட்டை விடவும் சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளம் தலைவிகளாகிய நீங்கள் முன்வர வேண்டும்”என கருத்துகளைத் தெரிவித்தார்.

இம்முறை விருது வழங்கும் விழாவில் சிறுமிகளின் ஒழுக்கம், நெகிழ்ச்சித்திறன், நேர்மைத்தன்மை மற்றும் பிறருக்குச் சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, 338 ஜனாதிபதி விருதுகளும், 12 பிரதமர் விருதுகளும் உள்ளடங்கலாக மொத்தமாக 350 விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.