இலங்கை போக்குவரத்து சபையின் நகரங்களுக்கு இடையிலான மற்றும் தொலைதூர சேவைகளுக்காக, முன்பு திட்டமிடப்பட்டிருந்த 600 சாதாரண பேருந்துகளுக்கு பதிலாக, 600 குளிரூட்டப்பட்ட (Deluxe) புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான அரச முதலீட்டுத் திட்டத்…

இலங்கை போக்குவரத்து சபையின் நகரங்களுக்கு இடையிலான மற்றும் தொலைதூர சேவைகளுக்காக, முன்பு திட்டமிடப்பட்டிருந்த 600 சாதாரண பேருந்துகளுக்கு பதிலாக, 600 குளிரூட்டப்பட்ட (Deluxe) புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான அரச முதலீட்டுத் திட்டத்தின் கீழ், 49 - 54 இருக்கைகள் கொண்ட பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 14,400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

2025–2026 வீதி பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில், நகரங்களுக்கு இடையிலான மற்றும் தொலைதூர சேவைகளுக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள் மிகவும் பொருத்தமானவை என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு அமைவாக பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த யோசனையை பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.