எல் நினோ மற்றும் லா நினா பருவநிலை சுழற்சியின் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை உடனடியாகத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். மாத்தறை - ஹம்பாந்தோட்டை, தல்ப பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்…
எல் நினோ மற்றும் லா நினா பருவநிலை சுழற்சியின் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை உடனடியாகத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
மாத்தறை - ஹம்பாந்தோட்டை, தல்ப பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் முதல் உலகளாவிய பல்வேறு நெருக்கடிகள் வரை இலங்கை ஏற்கனவே ஐந்து பெரிய பேரிடர்களைச் சந்தித்துள்ளதாகவும், விரைவில் ஆறாவது சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.கடுமையான வறட்சியைத் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும், குறுகிய காலத்திற்குள் இந்த இரண்டு தீவிர வானிலை மாற்றங்களையும் எதிர்நோக்க நேரிடலாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நிவாரண நடவடிக்கைகளுடன் மாத்திரம் நின்றுவிடாமல், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் முறைகளைக் கற்றுக்கொண்டு புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு, புதிய திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகள் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எளிதில் இலக்காகக்கூடும் என்றும், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்கங்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச எச்சரித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10











