ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–2027 சுழற்சியின் ஒரு பகுதியாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்தியா ஆகஸ்ட் மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று இலங்கை கிரிக்கெட் ஆணைக்குழு(SLC) அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் ஆணைக்குழுவின் ஊடக வெளியீட்டின்படி, மு…

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–2027 சுழற்சியின் ஒரு பகுதியாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்தியா ஆகஸ்ட் மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று இலங்கை கிரிக்கெட் ஆணைக்குழு(SLC) அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஆணைக்குழுவின் ஊடக வெளியீட்டின்படி, முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பில் உள்ள SSC விளையாட்டுக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.முதல் டெஸ்ட் சுற்றுப்பயணம்

இரு போட்டிகளும் காலை 10:00 மணிக்குத் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் கீழ், இந்தியா இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் டெஸ்ட் சுற்றுப்பயணம் இந்தத் தொடராகும்.