தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 89,639 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 65 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,973 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரி…
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 89,639 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 65 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,973 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் மாதத்தில் 21,533 டெங்கு தொற்றாளர்களும், மே மாதத்தில் 8,590 டெங்கு தொற்றாளர்களும், ஜனவரி மாதத்தில் 7,866 டெங்கு தொற்றாளர்களும், மார்ச் மாதத்தில் 6,013 டெங்கு தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர். அதிக அபாயம் உள்ள பிரிவுகள் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 4,292 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள மாகாணங்களிலேயே மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்புகளில் 52.93 சதவீதம், அதாவது 47,445 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.மாவட்ட அளவில், மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதத்தினராக கம்பஹா மாவட்டம் திகழ்கிறது. இதுவே அதிகபட்ச நோயாளிகளின் எண்ணிக்கையாகும்.
கொழும்பு மாவட்டத்தில் இருந்து 17,765 நோயாளிகளும், கண்டியிலிருந்து 6,366 நோயாளிகளும், மாத்தறையிலிருந்து 5,953 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
தற்போதைய இறப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், நாடு முழுவதும் 119 அதிக அபாயம் உள்ள சுகாதார அலுவலர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.












