இலங்கையில் தென்மேற்குப் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறைப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என கடமையில் இரு…
இலங்கையில் தென்மேற்குப் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறைப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என கடமையில் இருக்கும் வானிலை ஆய்வாளர் சச்சித் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.மழை பெய்யும் வாய்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் (23.08.2026) மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல முறை மழை பெய்யக்கூடும். வடமேற்கு மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகல மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இலங்கையின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் உடல் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும்.
பொலன்னறுவை போன்ற பகுதிகளில் காலை 8:30 மணிக்கெல்லாம் வெப்பநிலை 32 பாகை செல்சியஸை தாண்டுவதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் நேரத்தைச் செலவிடுவது அபாயகரமானது என தெரிவித்துள்ளார்.பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் எனவே, பிற்பகலில் வெளியில் செலவிடும் நேரத்தைக் குறைக்குமாறும், அதிகளவில் தண்ணீர் அருந்துவதுடன், குளிர்ச்சியான இடங்களில் இருக்க வேண்டும் எனவும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அதனால் அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7



-559448_850x460.jpg)


-559312_850x460.jpg)
-559425_850x460.jpg)
-559434_850x460.jpg)
-559441_850x460.jpg)


