அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோகிராம் அரிசியினை வழங்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் அரச ஊழியர்களுக்கு பச்சை அரிசி மற்றும் நாட…
அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோகிராம் அரிசியினை வழங்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் அரச ஊழியர்களுக்கு பச்சை அரிசி மற்றும் நாட்டரிசி ஆகிய அரிசி வகைகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்மொழிவு இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
விவசாய அமைச்சின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் 20 கிலோகிராம் அரிசியை வழங்குவதற்கான முன்மொழிவொன்று கிடைத்துள்ளது.
அதற்கமைய, 10 கிலோகிராம் வீதம் கொண்ட 2 அரிசிப் பொதிகள் தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.
இதற்காக, வவுச்சர் ஒன்று வழங்கப்படும் என்பதுடன், அதனைப் பயன்படுத்தி சதொச அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக இந்த அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி விநியோகிப்பதற்கே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

