கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை மற்றும் சிக்கலான சிறுநீரக சத்திர சிகிச்சை என இரண்டு சத்திர சிகிச்சைகள் இதன்போது…
கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை மற்றும் சிக்கலான சிறுநீரக சத்திர சிகிச்சை என இரண்டு சத்திர சிகிச்சைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது,சத்திர சிகிச்சைகள் இந்த ரோபோடிக் முறைத் தானாக இயங்காது, மாறாக சத்திர சிகிச்சை நிபுணரின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும்.
நிபுணர்கள் விசேட கன்சோல் மூலம் ரொபோவின் கைகளை இயக்கி, துல்லியமான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இந்த நவீனத் தொழில்நுட்பத்தினால் இரத்த இழப்பு குறைதல், சிறிய கீறல்கள், தொற்று அபாயம் குறைதல் மற்றும் சத்திர சிகிச்சை பிழைகள் குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

