இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 59,000 ஐத் கடந்துள்ளது.ஜூலை மாதத்தின் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 4,251 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு நோயாளர்கள் இதற்கமைய, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்க…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 59,000 ஐத் கடந்துள்ளது.ஜூலை மாதத்தின் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 4,251 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு நோயாளர்கள்

இதற்கமைய, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 59,638 ஆகும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளதுஇவர்களில் அதிகளவான நோயாளர்கள் கடந்த ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த நோயாளர்களின் எண்ணிக்கை 21,546 ஆகும்.

இதேவேளை, அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், இதற்கமைய அந்த மாகாணத்தில் இருந்து 31,249 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 9,507 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,172 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.