இலங்கையில் பெட்ரோல் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) அறிவித்துள்ளது. இதன்படி, Octane 95 பெட்ரோல் லிட்டருக்கு 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், Octane 92 பெட்ரோல் லிட்…

இலங்கையில் பெட்ரோல் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) அறிவித்துள்ளது.

இதன்படி, Octane 95 பெட்ரோல் லிட்டருக்கு 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், Octane 92 பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 399 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என Ceypetco தெரிவித்துள்ளது.

இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.