சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக் காவல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் (01.09.2026) இடம்பெற்றிருந்தது. இ…

சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக் காவல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் (01.09.2026) இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், பல சட்ட சீர்திருத்தங்கள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான சட்ட விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.சட்ட சீர்திருத்தம்நீதிமன்ற அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணற்ற சீர்திருத்தங்களில், சட்ட சீர்திருத்தமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளைத் துரிதப்படுத்துதல், பிணை வழங்க முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்கும், அத்தகையவர்களை சிறைக்கு வெளியே வீடுகளில் தங்க வைத்து தண்டனையை அனுபவிப்பதற்கும் தேவையான சட்ட சீர்திருத்தங்களைச் செய்தல் போன்ற பல சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில்தான் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.