நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.குடிநீர்…

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.குடிநீர் தட்டுப்பாடு இதற்கு மேலதிகமாக அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் எச்சரித்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது தேவைகள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.