இலங்கையில் வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். அதன்படி தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யு.வூட்லர் தெரி…

இலங்கையில் வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

அதன்படி தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யு.வூட்லர் தெரிவித்துள்ளார்.

வாடகை வாகன ஓட்டுநர்கள் அல்லது வாகன சேவைகளில் உதவி புரிபவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதை அடுத்து இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உறுதிப்படுத்த வேண்டிய விடயம்

அவர் மேலும் தெரிவிக்கையில், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், வாகனம் முறைப்படி பதிவு செய்யப்பட்டது தானா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். வாகனத்தின் பதிவு எண், ரகம் மற்றும் ஓட்டுநரின் பெயரைச் சரிபார்க்க வேண்டும்.

குறிப்பாக இரவில் பயணிப்போர், தங்களது தொலைபேசி அல்லது கூகுள் வரைபடம் மூலம் தங்களது நேரலை இருப்பிடத்தைக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இலக்கை அடையும் வரை அவர்கள் உங்களை கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இரவு நேர பயணங்களின் போது, ஓட்டுநர் அறிமுகமில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது எதிர்பார்க்காத பாதைகளில் செல்ல முயன்றால் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். பயணத்தின் போது முகம் தெரியாத நபர்கள் வழங்கும் உணவு, பானங்கள் அல்லது தண்ணீரைக் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது.

மயக்க மருந்து கலந்த உணவுகளைக் கொடுத்து பயணிகளை மயக்கமடையச் செய்து குற்றச் செயல்கள் புரிவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.தவிர்க்க வேண்டிய விடயம்பயணத்தின் போது பணம், மடிக்கணினி, கைத்தொலைபேசி மற்றும் நகைகள் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களைப் பிறருக்குத் தெரியும் வகையில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பயணத்தின் போது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அச்சுறுத்தலை உணர்ந்தாலோ, உடனடியாக பொலிஸின் அவசர உதவி எண்களான 119 அல்லது அவசர தகவல் சேவையான 118 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, வாகனம் மற்றும் சம்பவம் குறித்த விபரங்களை வழங்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வாகன ஓட்டுநர்களுக்கும் பொருந்தும் என நினைவூட்டியுள்ள பொலிஸார், பயணிகளை அழைத்துச் செல்லும்போது முறையான நடத்தை விதிகளைப் பின்பற்றுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.