பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆதரவாளர்கள…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆதரவாளர்கள் கவலை இந்நிலையில், இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என 3 ராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இம்ரான் கானின் உடல்நிலை குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அவரது குடும்பத்தினருக்கும், PTI கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவரது ஆதரவாளர்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ஏதேனும் நடந்தால் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக அவரது PTI கட்சி எச்சரித்துள்ளது.

இம்ரான் கான் நலமாக இருப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினரை சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.