காலி, அஹங்கம - கபாலான பகுதியில் இளைஞர் ஒருவர் கடலில் குதித்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதற்கு அடிமையாகி பெருமளவு கடன் ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலினால், குறித்த இளைஞன் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்தச்…
காலி, அஹங்கம - கபாலான பகுதியில் இளைஞர் ஒருவர் கடலில் குதித்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதற்கு அடிமையாகி பெருமளவு கடன் ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலினால், குறித்த இளைஞன் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
அஹங்கம, தித்தங்கல்ல, அம்பாவில பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இணைய வழி சூதாட்டம்இளைஞர் இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சுமார் 25 லட்சம் ரூபா வரை கடனில் சிக்கியுள்ளார். இதனால் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அஹங்கம கபாலான பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்குப் பின்னால் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர் அவர் கடலில் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடலில் மிதந்து கொண்டிருந்த அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் உறவினர்கள் வருகை தந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
இது குறித்து அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

