ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற மிகக் கடுமையான பரஸ்பர இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரான் “புதிய உத்தியை” முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறைத் தலைவர் எச்சரித்துள்ளார். ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலி…

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற மிகக் கடுமையான பரஸ்பர இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரான் “புதிய உத்தியை” முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தனது X பதிவில், அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை ஈரானின் புதிய போர்க்கள உத்தி, இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் அடித்தளத்தை சிதைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா புதிய, பெரிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளை பதிக்க ஈரான் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.மேலும், ஈரான் தரப்பில் இருந்து இதற்குப் பதிலடி வழங்கப்பட்டால், அதைவிட மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரான் பதிலடி

அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகமும், ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர் மீதும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மேற்கொண்டதாகக் கூறப்படும் சமீபத்திய தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது.با این دست و پا زدن‌ها، نه تنها از قعر جهنمی که برای خود ساخته‌اید بیرون نخواهید آمد، بلکه به زودی خواهید دید راهبرد جدید ایران در میدان جنگ، دیپلماسی و مقابله با محاصره اقتصادی، بنیان‌‌تان را درهم خواهد شکست.— محسن رضایی (@ir_rezaee) September 2, 2026 ஜோர்தான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈராக்கின் தன்னாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தானின் எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

“தற்காப்புக்கான இயல்பான உரிமையின் அடிப்படையிலேயே” இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெஹ்ரான் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்கா தமது பிராந்தியத்திலிருந்து இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தங்கள் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என அப்பகுதி நாடுகளையும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.