ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அரசியல் நடவடிக்கை என்னவென்றால் பல்வேறு எதிர்க்ட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளை ஒன்றிணைத்து தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பொதுவான அரசியல் முன்னணியை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த ஒன்றிணைவு அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஆதரவைத்…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அரசியல் நடவடிக்கை என்னவென்றால் பல்வேறு எதிர்க்ட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளை ஒன்றிணைத்து தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பொதுவான அரசியல் முன்னணியை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த ஒன்றிணைவு அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டும் நோக்கத்துடன் நடைபெறுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.நீதித்துறையின் சுயாதீனத்திற்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டையும் எதிர்கட்சியினர் முன்வைக்கின்றனர்.ஊழல் நிதிமோசடி உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிற விசாரணை அதிகாரிகளின் எதிர்காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகலாம் எனக் கூறப்படுகின்றது.இதேபோல் இன்னும்  இரண்டு வருடத்தில் வருகின்ற எங்களுடைய ஆட்சியிலே இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு உங்களை நாங்கள் சிறையில் அடைப்போம்.அந்தக்காலம் விரைவிலே நடக்கும் எனவும் அரசாங்கத்தைப் பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் சவால் விடுத்துள்ளார்.இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.