சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வட்ஸ்அப் சேவை இன்று (26) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய, பொதுமக்கள் தமக்குரிய முறைப்பாடுகளை 0702509509 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நேரடியாகத் தெரிவிக்க முடியும். ஆதாரங்…
சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வட்ஸ்அப் சேவை இன்று (26) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதற்கமைய, பொதுமக்கள் தமக்குரிய முறைப்பாடுகளை 0702509509 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நேரடியாகத் தெரிவிக்க முடியும்.
ஆதாரங்களுடன் கூடிய ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
களமட்டத்தில் இடம்பெறும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை உடனடியாக அறிவிப்பதற்கும், சூழல் நட்பு ரீதியான புதிய யோசனைகள் மற்றும் கருத்துகளை நேரடியாக அதிகாரிகளுக்குப் பகிர்ந்து கொள்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R

