மஹர சிறைச்சாலையில் நேற்று பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில், மற்றொரு சிறைக் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.தற்காலிக தீர்வு குறித்த பதிவில் மேலு…
மஹர சிறைச்சாலையில் நேற்று பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், மற்றொரு சிறைக் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.தற்காலிக தீர்வு
குறித்த பதிவில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
”சில வாரங்களுக்குள் நடக்கும் இரண்டாவது சிறைக் கலவரம் இது. இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் பெரும் அழுத்தத்தில் இருக்கும் சிறை அமைப்பின் விளைவாகும்.
நெருக்கடி நிகழும் போதிலும், சிறைத்துறை இன்றும் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட ஆணையர் இல்லாமல் தொடர்கிறது. கூடுதல் பாதுகாப்பு படையினரை நிறுத்துவது தற்காலிக தீர்வாக மட்டுமே அமையும் என்றும், சிறைச்சாலைகளில் நிலவும் அதிக நெரிசல், போதிய வசதியின்மை, தரமற்ற சுகாதார சேவைகள் மற்றும் திட்டங்களின் பற்றாக்குறை போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நெரிசல், போதுமான வசதியின்மை, மோசமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அர்த்தமுள்ள மறுவாழ்வு இல்லாமை ஆகியவை அவசரக் கவனத்தைக் கோருகின்றன.
சிறைத் தண்டனை ஒருவரின் சுதந்திரத்தை மட்டுமே பறிக்கிறது, அவரது கண்ணியத்தை அல்ல. அரசாங்கம் தற்காலிகத் தீர்வுகளைக் கைவிட்டு, நிறுவன ரீதியான தோல்வியின் தெளிவான அறிகுறிகளைக் காட்டும் சிறை அமைப்பைச் சரிசெய்யத் தொடங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். Another prison unrest. how many lives this time?This is the second major prison disturbance in a matter of weeks. It is no longer an isolated incident. It is the result of poor management, neglegence, and a prison system that is under immense strain.This is no longer about…— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 1, 2026












