இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் 3 டிங்கி படகுகள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் 39 மில்லியன் (4 கோடிக்கு அண்மித்த) ரூபாய் சந்தை மதிப்புள்ள அழகுசாதன கிரீம் துகளுடன் 6 சந்தேக நபர்களை நீர்கொழும்பு குற்றத்தடுப்புப்…
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் 3 டிங்கி படகுகள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் 39 மில்லியன் (4 கோடிக்கு அண்மித்த) ரூபாய் சந்தை மதிப்புள்ள அழகுசாதன கிரீம் துகளுடன் 6 சந்தேக நபர்களை நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன ரணசிங்கவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், உப பொலிஸ் பரிசோதகர் திசாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, பிட்டிபன மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கிரீம் துகளை ஏற்றிச் சென்ற லொறியையும், அதில் இருந்த இருவரையும் முதலில் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், கடல் வழியாக இந்த கிரீம் துகளைக் கொண்டு வந்த படகுகள் மற்றும் மேலதிகமாக 4 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

