இந்தியாவில் பெற்றோலுடன் 20 சதவீத எத்தனோல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் E20 பெற்றோல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் மைலேஜ் குறைவதாகவும் வாகனங்களின் என்ஜின்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி வாகன சாரதிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய அரசின் தேசிய உயிரி எரிபொருள்…
இந்தியாவில் பெற்றோலுடன் 20 சதவீத எத்தனோல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் E20 பெற்றோல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் மைலேஜ் குறைவதாகவும் வாகனங்களின் என்ஜின்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி வாகன சாரதிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ், பெற்றோலில் 20 சதவீத எத்தனோல் கலக்கும் இலக்கு 2030ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டிற்குள் முன்கூட்டியே மாற்றப்பட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் E20 பெட்ரோல் மட்டுமே தற்போது விநியோகிக்கப்படுகிறது.ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆனால், இந்த விரைவான மாற்றம் வாகன சாரதிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
E20 பெற்றோல் பயன்படுத்திய பிறகு தங்களது கார்களின் மைலேஜ் 10 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளதாக வாகன உரிமையாளர்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
மேலும், வாகனத்தின் வேகம் குறைவதோடு, மேடான பகுதிகளில் பயணிக்கும் போதும் ஏசி (AC) இயங்கும் போதும் காரின் இயக்கம் மந்தமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
எத்தனோல் சாதாரண பெற்றோலை விடக் குறைந்த ஆற்றலையே உருவாக்குகிறது என்பதால் மைலேஜ் குறைவது தவிர்க்க முடியாதது என்பதை நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.
அதோடு, 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் E20 எரிபொருளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாலும், அதற்கு முன்பு வாங்கிய இலட்சக்கணக்கான பழைய வாகனங்களின் என்ஜின்களில் உள்ள இறப்பர் குழாய்கள், கேஸ்கெட்டுகள் மற்றும் சீல் ஆகியவற்றைப் பெற்றோலுடன் கலந்திருக்கும் எத்தனோல் அரித்துச் சிதைத்துவிடும் என்ற அச்சமும் தற்போது நிலவுகிறது.

