இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ வீரரொருவர் கடத்தப்பட்டு கொலை செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப்பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநப…

இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ வீரரொருவர் கடத்தப்பட்டு கொலை செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப்பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வுத்துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, ஜூன் 8 ஆம் திகதி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்கள் அடங்கிய பொதியுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.வெளியான காரணம் இதனையடுத்து சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குருவிட்ட பகுதியில் நிசங்க என்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. குறித்த இராணுவ அதிகாரியின் மனைவியுடன் தனக்கு நெருங்கிய உறவு இருந்தமையே இதற்கு காரணம் என்றும் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட சடலம் அப்பகுதியில் உள்ள நிலத்தில் புதைக்கப்பட்டு, பின்னர் ஆற்றில் வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சந்தேகநபர் நேற்று விசாரணை அதிகாரிகளிடம் சடலம் புதைக்கப்பட்ட இடத்தையும் அடையாளம் காட்டியுள்ளதுடன்,சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. 25 வயது பெண் கொலை இந்த கொலை தொடர்பில் அறிந்திருந்த 25 வயது பெண்ணை சந்தேகநபர் இந்தியாவிற்கு அழைத்துச்சென்று, அங்கு அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் நெருங்கிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.