இலங்கைத்தீவு இந்து சமுத்திரத்தின் கிழக்கு-மேற்காகவும் வடக்கு- தெற்காகவும் பிரிக்கும் பிரிகோட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அது இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் அதன் அமைவிடம் சார்ந்து அதனுடைய உலகளாவிய அரசியல் முக்கியத்துவமும், ப…
இலங்கைத்தீவு இந்து சமுத்திரத்தின் கிழக்கு-மேற்காகவும் வடக்கு- தெற்காகவும் பிரிக்கும் பிரிகோட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அது இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படுகிறது.
ஆயினும் அதன் அமைவிடம் சார்ந்து அதனுடைய உலகளாவிய அரசியல் முக்கியத்துவமும், பிராந்திய முக்கியத்துவமும் பெருமதி வாய்ந்தது.
இலங்கைத் தீவின் புவியியல் அமைவிடம்தான் அதுவும் குறிப்பாக இந்திய துணைக்கண்டத்துக்கு நெருக்கமாக அது அமைந்திருக்கிறது என்ற அடிப்படையிலேயேதான் அதனுடைய கேந்திர மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.சமூகத்தை உயர்த்த வரும் புலம்பெயர் தமிழர்கள் அதையும் மீறி தமிழ்ச் சமூகத்தை அறிவியல் மயப்படுத்த முனையும் முற்போக்காளர்களை தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களினால் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிடுவர்.
இத்தகைய சூழ்நிலையில் ஓடுகாலிகளே தலைமை தாங்க முன்வருவர். அந்த ஓடுகாலிகளுக்கு புகழாரம் சூட்டி புகழ்ந்து பேசுவதற்கு ஆயிரம் முட்டாள்கள் ஒன்று சேர்வர்.
அந்த முட்டாள் கூட்டம் அறிவியளாலர்கள் மீது கல்லெறிந்து சமூகத்திலிருந்து தூரத்தூரத்தி விடுவர். அத்தகைய ஈழத் தமிழர்களை தோல்வியடைந்த சமூகமாகவே என்னால் அடையாளப்படுத்த முடிகிறது.
தோல்விச் சமூகமான ஈழத்தமிழர் எதிர்கொள்ளும் சிங்கள அரசும், சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த மதபீடங்களும், மகாநாயக்க தேரர்களும், சிங்கள மக்களும், அறிவியலில் பெருவளர்ச்சியை அடைந்திருக்கின்றனர். இலங்கை - தமிழ்நாடு இணைக்கும் முயற்சி அவ்வாறே சிங்களக் கிறிஸ்தவர்களும் அறிவியலில் பெருவளர்ச்சியடைந்துள்ளனர். என்பதனை சிங்கள கிறிஸ்தவ திருச்சபையிலிருந்து வெளிவரும் கருத்துக்களிலிருந்து அறிய முடியும்.
“Bridge project poses danger to sovereignty and Independence of SriLanka”என்ற தலைப்பில் the island எனும் இணையவழி பத்திரிகைக்கு(E-paper) கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் 24-06-2024ல் வழங்கிய பேட்டியில் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முன்மொழியப்பட்ட தரைவழிப் பாலம் அமைக்கும் திட்டம் “இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்“ என்று எச்சரித்து, கத்தோலிக்கத் திருச்சபை எதிர்த்துள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறிவிடும் என்று கூறினார்.அத்தோடு “The Catholic Church has opposed the proposed India-Lanka land bridge connectivity project, warning that it will endanger Sri Lanka’s sovereignty and independence.Colombo Archbishop Cardinal Malcolm Ranjith, speaking to the media at Ruwanwella on Friday, said that if implemented, the project would make Sri Lanka part of Tamil Nadu.
தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் அவ்வப்போது இந்நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்த வரலாறுகள் நம்மிடம் உள்ளன.
ஒவ்வொரு முறையும், அவர்களை விரட்டியடித்து அப்பகுதிகளை மீட்க சிங்கள மன்னர்கள் படைகளைத் திரட்ட வேண்டியிருந்தது.
இப்போது, தமிழ்நாட்டையும் இலங்கையையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இது நிச்சயமாக இந்நாட்டை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாற்றிவிடும் என்று கர்தினால் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தரைவழி இணைப்புக்கான ஆரம்பகட்ட சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாகவும், முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு விரைவில் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஜூன்16ல் அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே கர்தினாலின் இந்தக் விமர்சனம் வந்துள்ளது.
கர்தினால் மேலும் கூறியதாவது, “இந்த பாலம் யாருக்குத் தேவை? உள்ளூர் மக்களின் கோரிக்கையினால் அல்லாமல், வெளிநாட்டினரின் கோரிக்கையைத் தொடர்ந்தே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
வெளிநாட்டிலிருந்து வரும் கட்டளைகள் நமக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று சிந்திக்காமல் அவற்றைச் செயல்படுத்துவதில் இந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது.
நமக்கு நன்மை பயக்காதவற்றைச் செயல்படுத்தாமல் இருப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நாம் ஏற்கனவே எதிர்கொண்டுள்ள நெருக்கடியை விட மோசமான நெருக்கடியில் சிக்கிக்கொள்வோம்.
நமது இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் நாம் செய்யக்கூடாது." என வலியுறுத்தியுள்ளார்.ரணில் பரிந்துரைத்த திட்டத்தின் நோக்கம்
ஜூலை 2023ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் விக்ரமசிங்க தான் இரு நாடுகளுக்கும் இடையே தரைவழிப் பால இணைப்புக்கான முன்மொழிவை அப்போது இராஜதந்திர விளையாட்டாகவே முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது 25 கி.மீ மட்டுமே அகலம் கொண்ட பாக்குநீரிணைப் பகுதியில் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற துறைமுகங்களை இந்தியா இலகுவாக அணுக வழிவகுக்கும் என இந்தியர்களுக்கு ரணில் ஆசை வார்த்தை காட்டி அன்றைய இலங்கைக்கான பொருளாதார நலனை பெற்றுள்ளார்.
இத்தகைய ஆசை வார்த்தைகளை சிங்களத்தரப்பு காலத்திற்குக்காலம் இந்தியர்களுக்கு அவிழ்த்துவிட்டு தமது தேவைகளையும் நலன்களையும் பெற்றுவிடுவர்.
இப்படியான இராஜதந்திர ஏமாற்றுக்களை உண்மைபோல நம்பவைக்கவே மல்கம் ரஞ்சித் ஆண்டகை போன்றவர்களின் எதிர்ப்புத் தப்புத்தாளம் துணைபுரிகிறது.தமிழர்களை மையமாக கொண்டு நடத்தப்படும் நாடகம் சிங்கள அரசின் இராஜதந்திர சித்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே சிங்கள கிறிஸ்தவ திருச்சபை தொழிற்படுவதோடு அவர்களிடம் இந்திய எதிர்ப்புவாதம் புரையோடிப் போயுள்ளதை அதனது செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கிறது.
இத்தகைய பின்னணியில் சிங்கள சமூகத்தில் இந்துசமுத்திரம் பற்றிய பார்வையை சிங்கள புத்திஜீவிகளதும், அறிஞர்களதும் கருத்தியல் இப்படித்தான் அமைகிறது. இலங்கை–இந்தியா எதிர்காலத்திற்கான ஒரு பாலமா... அல்லது ஆபத்தா? என அவர்கள் அறிவுபூர்வமாக தத்துவார்த்த ரீதியில் ஆராய முற்படுகிறார்கள்.அவ்வாறு ஆராய்வதன் ஊடாக அவர்கள் பின்வரும் கருத்தை முன்வைக்கின்றனர்.
"இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் எதுவும் இருந்ததில்லை என்றும் அங்கு இருப்பது 'ஆடம்ஸ் பிரிட்ஜ்' (ராம சேது) எனப்படும் இயற்கையான ஆழமற்ற திட்டுக்கள் மட்டுமே.இது மனிதர்களால் அல்லாமல் இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு தொன்மையான இணைப்பாகும். என்கின்றனர். மேலும் "இன்று,ஒரு நவீன தரைவழி பாலத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது இந்திய தரப்பிலிருந்து எழுகின்றன.
அவை விரைவான வர்த்தகம், சுற்றுலா வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவை இதன் மூலம் கிடைக்கும் என்று வாக்குறுதிகளை தருகின்றனர் இவை இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பயனளிப்பதாக அமையும்.
ஆனால் அது அரசியல் ரீதியாக இலங்கைத் தீவை பாதிக்கும்" உறுதியாக நம்புகின்றனர்.
ஒரு சிறிய தீவு நாடான இலங்கைக்கு பாலம் கட்டுவதனால் உண்மையான ஆபத்துகள் ஏதேனும் உள்ளனவா? நமது இறையாண்மை மற்றும் மூலோபாய சுதந்திரம் (strategic independence) பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா?
பாதுகாப்பு மற்றும் எல்லை நிர்வாகம் சார்ந்த சவால்கள் எழக்கூடுமா? உள்ளூர் தொழில்கள் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகள் மீது தாக்கம் ஏற்படுமா? மிகப் பெரிய அண்டை நாட்டின் பொருளாதார ஆதிக்கம் மேலோங்குமா? மக்கள் இடம்பெயர்வு மற்றும் மக்கள்தொகை சார்ந்த அழுத்தங்கள் உருவாகுமா? என தத்துவார்த்த ரீதியாக கேள்வியையும் சிங்கள தரப்பு எழுப்புகிறது.பாலம் அமைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம் "நிரந்தரமான மூலோபாய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, மாற்றியமைக்க முடியாத இத்தகைய திட்டத்தை ஒரு பொது வாக்கெடுப்புக்கு (referendum) உட்படுத்தலாமா?
ஒரு பாலம் என்பது வெறும் கான்கிரீட் கட்டுமானம் மட்டுமல்ல அது நமது தேசத்தின் தன்மையையே மறுவரையறை செய்யக்கூடிய ஒரு முக்கிய முடிவாகும்" என்பதையும் அவர்கள் கவனத்திற்கு கொள்கின்றனர்."நாம் அண்டை நாட்டுடன் இணையத் துணிகிறோமா, அல்லது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது தீவு நாட்டைப் பாதுகாத்து வந்துள்ள கடலை நாம் போற்றிக் காக்க வேண்டுமா? என்ற கேள்வி சிங்கள மக்கள் மத்தியில் வலுவாக இருப்பதனாலேயே அவர்கள் இலங்கைக்கு இந்தியாவுக்குமான பாலத்தை எதிர்க்கின்றனர்.
அதனை கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி "இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பாலம் அமைப்பதற்கு தற்போது நாடு தயார் இல்லை" என்று மறுத்துவிட்டார் என்பதிலிருந்து அவர்கள் புவிசார் அரசியலை இலாவகமாக கையாள்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இலங்கைத் தீவின் இருப்பிடம் சார்ந்து ஈழத் தமிழர்கள் எடுக்கக்கூடிய மூலோபாய யூகம் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்
தொடரும்...












