அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களிடையே, தற்போது iPhone 18 Pro மொபைல் குறித்த ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொலைபேசியின் தோற்றம் தொடர்பான விடயங்கள் தற்போது இணையத்தளங்களில் கசிந்துள்ளன. இணையத்தளங்களில் வெளியான தகவல்களின்படி, iPhone 1…

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களிடையே, தற்போது iPhone 18 Pro மொபைல் குறித்த ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொலைபேசியின் தோற்றம் தொடர்பான விடயங்கள் தற்போது இணையத்தளங்களில் கசிந்துள்ளன.

இணையத்தளங்களில் வெளியான தகவல்களின்படி, iPhone 18 Pro மொடல் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் Drop Test (கீழே விழும் நிலைத்தன்மை சோதனை) தொடர்பான காணொளி மற்றும் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.எச்சரிக்கையுடன் அணுக

இந்த தகவல் கசிவின் மூலம், புதிய iPhone மொடலின் வடிவமைப்பு, கேமரா அமைப்பு மற்றும் வெளிப்புற கட்டமைப்பு குறித்து சில முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளதாக தொழில்நுட்ப தரப்புக்கள் தெரிவிக்கின்றன. — AppleGeek (@Apple_Geek_Actu) June 30, 2026 எனினும், இந்த தகவல்கள் குறித்து அப்பிள் நிறுவனம் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே, இணையத்தில் பரவி வரும் இந்த தகவல்கள் மற்றும் கசிந்த படங்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை என்பதால், அவற்றை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.