இறைவரித் திணைக்கள அதிகாரி என கூறி பண மோசடி வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எனப் போலி அடையாளத்தைக் காட்டி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
இறைவரித் திணைக்கள அதிகாரி என கூறி பண மோசடி
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எனப் போலி அடையாளத்தைக் காட்டி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறைவரித் திணைக்களத்தின் அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, சந்தேக நபர் பல்வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்துள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஆவார்.
சந்தேக நபர் இதற்கு முன்னரும் இது போன்ற பண மோசடி சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

