மார்வெல் ஸ்டூடியோஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘Avengers: Doomsday’ திரைப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகி, உலகம் முழுவதும் உள்ள மார்வெல் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான டிரெய்லரில், ராபர்ட் டவுனி ஜூனியர் இந்த முறை Iron Man ஆக அல்லாமல…
மார்வெல் ஸ்டூடியோஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘Avengers: Doomsday’ திரைப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகி, உலகம் முழுவதும் உள்ள மார்வெல் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெளியான டிரெய்லரில், ராபர்ட் டவுனி ஜூனியர் இந்த முறை Iron Man ஆக அல்லாமல், சக்திவாய்ந்த வில்லன் Doctor Doom கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும், Thor, Captain America, Fantastic Four, X-Men உள்ளிட்ட பல முக்கிய சூப்பர் ஹீரோக்களின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த திரைப்படத்தை ரூசோ சகோதரர்கள் (Anthony Russo மற்றும் Joe Russo) இயக்கியுள்ளனர். பல்வேறு மார்வெல் பிரபஞ்சங்களை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம், 2026 டிசம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் #AvengersDoomsday மற்றும் #DoctorDoom ஆகிய ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் புதிய அத்தியாயமாக இந்தப் படம் அமையும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

