ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்படி, இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவதற்…
ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதன்படி, இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எனினும், மத மற்றும் விசேட நிகழ்வுகளுக்காக உரிய அனுமதியைப் பெற்று, குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுமதி வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய நேரம் பின்வருமாறு:
திங்கட்கிழமை – வியாழக்கிழமை: இரவு 10.00 மணி வரைவெள்ளி – சனிக்கிழமை: அதிகாலை 1.00 மணி வரைஞாயிற்றுக்கிழமை: அதிகாலை 12.30 மணி வரை
இந்நேர வரம்புகள் அனுமதி பெற்றவர்களுக்கு தானாகக் கிடைக்கும் உரிமை அல்ல எனவும், ஒலி சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் மட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அனுமதி வழங்கப்பட்ட நிகழ்வுகளில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












