இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இன்று(29.06.2026) அதிகாலை வீதிச் சோதனையில் மேற்கொண்ட பொலிஸார் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைஇதன்போது வி…

இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இன்று(29.06.2026) அதிகாலை வீதிச் சோதனையில் மேற்கொண்ட பொலிஸார் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைஇதன்போது விசுவமடு பகுதியில் இருந்து அனுமதி இன்றி மரங்களை வெட்டி யாழ்ப்பாணம் கொண்டு சென்ற இரண்டு கப்ரக வாகனம் பொலிஸாரின் வீதிச் சோதனையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன். புளியம்பொக்கனை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றினனையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்களையும் தடயப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.