2026 FIFA உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக, ட்ரம்ப் மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகிய இரு உலகத் தலைவர்களும் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுடன் இணைந்து சந்தித்துக் கொண்ட விசேட புகைப்படம் தற்பொழுது சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும்…

2026 FIFA உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக, ட்ரம்ப் மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகிய இரு உலகத் தலைவர்களும் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுடன் இணைந்து சந்தித்துக் கொண்ட விசேட புகைப்படம் தற்பொழுது சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.பாதுகாப்புச் செலவினங்கள் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையில் கடுமையான இராஜதந்திர மோதல்கள் நிலவி வந்தன. இராஜதந்திர முரண்பாடுகள் இந்நிலையில் தற்போது, நியூ ஜெர்சியில் நடைபெற்ற 2026 உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் போது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.சமீபத்திய மாதங்களாக நேட்டோ (NATO) பாதுகாப்புச் செலவினங்கள், ஈரான் விவகாரம் மற்றும் வர்த்தகக் கொள்கைகள் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பகிரங்கமாக இராஜதந்திர முரண்பாடுகள் நீடித்து வந்த சூழலில், இந்தச் சந்திப்பு அரங்கேறியுள்ளது. ​கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ட்ரம்ப், ஸ்பெயினை ஒரு மோசமான நேட்டோ கூட்டாளி எனக் கடுமையாக விமர்சித்திருந்த போதிலும், உலகக் கிண்ண இறுதிப்போட்டி மேடையில் இரு தலைவர்களும் தங்களுக்கு இடையிலான அரசியல் மாற்றுக்கருத்துக்களைத் தாண்டி, விளையாட்டுத் தூதரகத்தின் ஒரு பகுதியாகக் கைகுலுக்கி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னணியில் நிகழ்ந்த இந்தத் தலைவர்களின் சந்திப்பு, சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.