இசைக்குயிலுக்கு இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை அவரது இல்லத்திலிருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்க…

இசைக்குயிலுக்கு இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை அவரது இல்லத்திலிருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4.00 மணியளவில் மைசூரில் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.