இசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது இந்த இசை நிகழ்ச்சியை பிரிட்டனை சேர்ந்த Gaana Vin Four Seasons Group இணைந்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், “50 Years of Ilaiyaraaja” எனும் இந்த இ…
இசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது இந்த இசை நிகழ்ச்சியை பிரிட்டனை சேர்ந்த Gaana Vin Four Seasons Group இணைந்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், “50 Years of Ilaiyaraaja” எனும் இந்த இசை நிகழ்வு கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளில் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அவரது இனிமையான இசை மற்றும் பாடல்களை கேட்பதற்கும், ரசிப்பதற்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
லண்டன் மக்களை சந்திக்கவுள்ள இளையராஜா இந்நிலையில், Gaana Vin Four Seasons Group UK நடத்திய ஐரோப்பிய இசை சுற்றுப்பயணத்தில் டப்ளின், சூரிச் மற்றும் ஜெர்மனியின் எசென் ஆகிய நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்று ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இசைஞானி இளையராஜா மற்றும் அவரது குழுவினர் மிகுந்த உற்சாகத்துடன் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, Gaana Vin Four Seasons Group UK-யின் ஆதரவுடன் இசைஞானியின் ஐரோப்பிய இசை சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக அடுத்த நிகழ்ச்சி லண்டனில் உள்ள OVO Arena-வில் ஜூலை 11ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை https://www.ovoarena.co.uk/ ஒன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

