அமெரிக்க மத்திய வங்கியான 'ஃபெடரல் ரிசர்வ்' அமைப்பின் ஆளுநர் லிசா குக்கை பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட அதிரடி முயற்சிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (ஜூன் 29) தடை விதித்துள்ளது. மத்திய வங்கியின் சுதந்திரத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், உச்…
அமெரிக்க மத்திய வங்கியான 'ஃபெடரல் ரிசர்வ்' அமைப்பின் ஆளுநர் லிசா குக்கை பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட அதிரடி முயற்சிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (ஜூன் 29) தடை விதித்துள்ளது.
மத்திய வங்கியின் சுதந்திரத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5-4 என்ற வாக்குகள் கணக்கில் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர். ட்ரம்பின் கோரிக்கை1913-ஆம் ஆண்டில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டதற்குப் பிறகு, அதன் உயர் அதிகாரி ஒருவரைப் பணிநீக்கம் செய்ய முயன்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆவார்.
லிசா குக் மீது சுமத்தப்பட்ட வீட்டுக்கடன் மோசடி முறைப்பாடுகளைக் காரணம் காட்டி கடந்த ஓகஸ்ட் மாதம் ட்ரம்ப் அவரை நீக்க முயன்றார். ஆனால், வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான கொள்கை முரண்பாடுகள் காரணமாகவே ட்ரம்ப் பழிவாங்கும் நோக்கில் இந்த போலிக்குற்றச்சாட்டு நடவடிக்கையை எடுத்ததாக லிசா குக் நீதிமன்றத்தில் வாதிட்டார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய விசாரணை மற்றும் முன்னறிவிப்பு இன்றி லிசா குக்கை நீக்க முடியாது என்று இடைக்காலத் தடை விதித்தது.அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை
இந்தத் தடையை நீக்கக் கோரி ட்ரம்பின் நீதித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்களைக் குறைக்க மத்திய வங்கி மறுத்ததால் இந்த மோதல் வெடித்தது.
முன்னதாக, மத்திய வங்கியின் தலைவராக இருந்த ஜெரோம் பவலுக்கு எதிராகவும் ட்ரம்ப் நிர்வாகம் குற்றவியல் விசாரணையைத் தொடங்கி, பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக அதைக் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதம் ட்ரம்பின் உலகளாவிய இறக்குமதி வரிக் கொள்கைகளை இரத்து செய்த உச்ச நீதிமன்றம், தற்போது இரண்டாவது முறையாக ட்ரம்பின் எல்லையற்ற அதிகாரப் போக்கிற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு அமெரிக்க அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

