சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது, இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. தனது குறுகிய உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இன்று இலங்கையை வந்தடைந்ததாக த…
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது, இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. தனது குறுகிய உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இன்று இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த சந்திப்பின் போது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள இடைக்காலக் குழுவின் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய கிரிக்கெட் நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பாக ஐசிசி கொண்டுள்ள விதிகளுக்கு, இந்த இடைக்காலக் குழுவின் நியமனம் முரணானது என ஐசிசி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

