தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணாவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நடிகரும் முதல்வருமான விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' படத்தை கர்நாடகத்தைச் சேர்ந்த கே.வி.என் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தை கடந்த பொங்கலுக்கு வெளியிட திட்ட…

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணாவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நடிகரும் முதல்வருமான விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' படத்தை கர்நாடகத்தைச் சேர்ந்த கே.வி.என் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தை கடந்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், படத்தின் தணிக்கையில் ஏற்பட்ட பிரச்னையால் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வெற்றிபெற்று முதல்வராகவும் பதவியேற்றிருக்கிறார்.

படம் வெளியாக நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரை சந்தித்த போதும் கே.வி.என் நிறுவனத்தின் உரிமையாளர் கே.வெங்கட நாராயணா உடன் இருந்தார். அவர் விஜய்யுடன் சென்றது ஏன்? என்று அப்போது எதிர்ப்புகளும் கிளம்பியிருந்தன.

இந்த நிலையில், தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார் என தலைமைச் செயலர் சாய்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியான கே.வெங்கட நாராயணாவுக்கு அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் வழங்கப்படும். (a)