முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவ்கூட நடைமுறைப்படுத்தாத அளவிலான சர்வாதிகாரப் போக்கை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.மகாநாயக்க தேரர்களின் அனுசாசனையையும் ஏற்றுக்கொள்ளாத நிலைக்கு தற்போ…
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவ்கூட நடைமுறைப்படுத்தாத அளவிலான சர்வாதிகாரப் போக்கை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.மகாநாயக்க தேரர்களின் அனுசாசனையையும் ஏற்றுக்கொள்ளாத நிலைக்கு தற்போதைய அரசாங்கம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வஜன அதிகாரத்தின் மொனராகலை மாவட்ட தொகுதி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) பிற்பகல் புத்தல சந்தை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே திலித் ஜயவீர மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டார்.
தற்போது நாட்டின் ஜனநாயகம் உச்சக்கட்ட சவாலுக்கு முகங்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எந்த ஜனாதிபதியும் இதுவரை மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான அதிகாரமிக்க அரசியல் நிலை உருவாகுவதற்கு நாட்டு மக்கள் காரணமல்ல என்றும், சுயநல அரசியல்வாதிகளே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தமது அரசியல் நடவடிக்கைகள் முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டவை எனக் குறிப்பிட்ட திலித் ஜயவீர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயற்படுவது இதன் நோக்கமல்ல என்றும் தெரிவித்தார்.
அரசியலில் குடும்பப் பின்னணி அல்லது பரம்பரை உரிமை மூலம் தலைமைத்துவம் கிடைக்கும் என்ற எண்ணம் மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“அரசியலில் எதுவும் தந்தையின் உரிமையால் கிடைக்காது; மக்களின் அன்பின் மூலமே அரசியல் உரிமை கிடைக்கும்” எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

