போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-27 கால்பந்து சீசன் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளமை அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது நீண்டகால துணைவியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்துகொண்…

போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-27 கால்பந்து சீசன் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளமை அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது நீண்டகால துணைவியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்துகொண்ட பின்னர் வழங்கிய பேட்டியிலேயே ரொனால்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் பயணம்

கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மகத்தான மரபொன்றை விட்டுச் செல்ல விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் தனது ஆறாவது உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற பின்னர், ஓய்வு தொடர்பான முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்திற்காக விளையாடி வரும் ரொனால்டோ, ஓய்வுக்குப் பின்னர் தனது அதிக நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடவும், உலகம் முழுவதும் பயணம் செய்யவும், தனக்கு மிகவும் பிடித்த ‘பேடல்’ விளையாட்டில் ஈடுபடவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.